இலங்கையில் தொடர்குண்டு தாக்குதல் – விசாரணைகளுக்கு இன்டர்போல் உதவுவதாக அறிவிப்பு

332 0

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதல் குறித்த விசாரணைகளுக்கு உதவ தயாராகவுள்ளதாக இன்டர்போல் அறிவித்துள்ளது..

 இன்டர்போல் பொதுச்செயலாளர் ஜுர்கென் ஸ்டாக் தனது டுவிட்டர் பக்கத்தில்  இதனை  அறிவித்துள்ளார்.

குறித்த பதிவில், கொடூரமான இந்த தாக்குதல் சம்பவத்தினை வன்மையாக கண்டிக்கின்றோம். தேசிய அளவில் அதிகாரிகள் நடத்தும் விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பினை வழங்குவோம் என பதிவிட்டுள்ளார்.