மத்திய அரசு தமிழகத்துக்கு தொடர்ந்து துரோகம் செய்கிறது – தொல்.திருமாவளவன்

344 0

thirum-300x198காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என மத்திய அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும் என தொல்.திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

உயர்மட்ட குழு அமைத்து, அந்த குழு காவிரி பிரச்சனை குறித்து விரைவில் அறிக்கை தாக்கல் செய்யும் என்று அறிவித்துள்ளார்கள்.

எத்தனை குழுக்கள் அமைத்து, என்ன அறிக்கை தாக்கல் செய்தாலும் மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்துக்கு துரோகம் விளைவித்து, கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது.

முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற்று மீண்டும் ஆட்சி பொறுப்பை கவனிக்க வேண்டும் என்பது அனைவரின் பொது கருத்தாக உள்ளது.

துணை முதல்வரை நியமிக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு மட்டுமே உண்டு. கவர்னருக்கு அதிகாரம் இல்லை எனவும் தொல்.திருமாவளவன்.