துருக்கிய சதி புரட்சி – 125 பொலிஸ் அதிகாரிகள் கைது

348 0

201610120315209361_turkey-orders-arrest-of-125-police-officers_secvpf-gifதுருக்கி நாட்டில் கடந்த ஜூலை மாதம் 15ஆம் திகதி இராணுவத்தின் ஒரு பிரிவினர் புரட்சிக்கு முயற்சித்தனர்.

எனினும் அந்த புரட்சி முயற்சியை அதிபர் தாயிப் எர்டோகன், மக்கள் துணையுடன் முறியடித்து விட்டார்.

இந்த புரட்சியின் பின்னால், அமெரிக்க வாழ் துருக்கி மத குரு பெதுல்லா குலன் இருந்ததாக துருக்கி அரசு நம்புகிறது.

புரட்சி முயற்சி விவகாரத்தில் அவரது ஆதரவாளர்கள் மீது துருக்கி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில் இப்போது 125 பொலிஸ் அதிகாரிகளை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த துருக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் ஏற்கனவே 32 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு, அரசு துறைகளை சேர்ந்த ஒரு லட்சம்பேர் பணி இடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.