முதலமைச்சர் ஜெயலலிதாவின் பொறுப்புகளை நிதி அமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர் செல்வதிற்கு வழங்கி, தமிழக ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
அதனை தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மு.கா.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
இதுதொடர்பில் அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அமைச்சரவைக் கூட்டங்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் தலைமை தாங்குவார் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாநிலத்தை காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு என்று பல்வேறு பிரச்சினைகள் சூழ்ந்திருக்கின்றன.
இதுபோன்ற மாநிலத்தின் பல்வேறு நிர்வாகப் பிரச்சினைகளை கலந்து ஆலோசிக்க பொறுப்புள்ள அமைச்சரவை இருக்க வேண்டும்.
அந்த அமைச்சரவைக்கு ஒரு தலைவர் தேவை. அப்போதுதான் அமைச்சரவைக் கூட்டங்களைக் கூட்டி மாநில நலன் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்க முடியும்.
இந்த சூழ்நிலையில் மாநில நிர்வாக நலன் கருதி தமிழக கவர்னர் எடுத்துள்ள இந்த நடவடிக்கையை தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் வரவேற்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.