இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் இறைவனின் அருளால் உயிர் தப்பியதாக பிரித்தானியாவின் கன்சர்வேட்டிங் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நெர்ஜ் தேவா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருகை தரவிருந்த விமானம் ஒரு மணித்தியாலம் தாமதித்து வருகை தந்தமையினாலேயே உயிர் தப்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது குண்டு வெடிப்பு நிகழ்ந்த பின்னரே நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றிருந்ததாக நெர்ஜ் தேவா கூறியுள்ளார்.
இதேவேளை குறித்த குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்த அனைத்துவருக்கும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கொடிய தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் மனிதாபிமானமற்ற ஈனச்செயலெனவும் நெர்ஜ் தேவா வர்ணித்துள்ளார்.
ஐந்து பிரித்தானியர்கள் இந்த குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.