இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக, கொண்டுவரப்படவுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைபிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின்போது உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைபிற்கான அங்கீகாரத்தை அமைச்சரைவ வழங்கியுள்ளது.
அமைச்சரவையின் போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்க சட்டமூலத்தின் வரைபினை சமர்பிக்க சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல அதனை வழிமொழிந்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின சரத்துக்கள் தொடர்பில் சிவில் சமூகத்தினர் பல விமர்சனைங்களை வெளியிட்டுள்ள நிலையில், அது இருக்கும் சட்டத்தினைவிடவும் பயங்கரமானதாக அமையும் என்றும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இவ்வாறு விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், உத்தேச சட்டமூலத்தின் உள்ளடக்கங்கள் இதுவரை பகிரங்கப்படுத்தாமையினால் மக்கள் மத்தியில் குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில் பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.