மொஹமட் சஹ்ரான் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜமாத் என்ற அடிப்படைவாத அமைப்பு இலங்கையில் பல தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தது.
இந்த தாக்குதல் திட்டம் குறித்து முன்கூட்டியே புலனாய்வு பிரிவு அறிவுறுத்தி இருந்தது என்ற தகவலை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் இந்த அச்சுறுத்தல் குறித்த ஆவணங்கள் உண்மை என அமைச்சரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்தோடு தாக்குதல் நடத்தப்படலாமென புலனாய்வு அதிகாரிகளால் தனது தந்தையார் அறிந்து கொண்டதாகவும் அமைச்சர் ஹரீன் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் ஹரீனின் இந்த தகவல்கள் கொழும்பு அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை புறக்கணித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.