இலங்கையில் 138 மில்லியன் மக்கள் பலி – சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப்

405 0

நாடு முழுவதும் இன்று இடம்பெற்ற பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து, இலங்கை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்தினால் பெரும் சர்ச்சை எழுந்தது.

ட்ரம்ப் அந்த டுவிட்டர் பதிவில், இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பினால் 138 மில்லியன் மக்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்திருந்தார்.

ட்ரம்ப் தனது ட்விட்டர் பதிவில் 138 பேர் என்பதற்கு பதிலாக 138 மில்லியன் (13.8 கோடி) என்று குறிப்பிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து பதிவை சரி செய்யும்படி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரிட்வீட் செய்திருந்தனர்.

இதையடுத்து தனது பதிவை ட்ரம்ப் திருத்திக் கொண்டதுடன், உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்களையும் தெரிவித்தார்.

இதேவேளை நாடு முழுவதும் இன்று இடம்பெற்ற 8 குண்டு வெடிப்பு சம்பவங்களினால் இதுவரை 207 பேர் உயிரிழந்துள்ளதுடன் 450 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.