அனைத்து பயணிகளும் புகையிரதங்கள், தனியார் போக்குவரத்து பேருந்துகள்களில் பொதிகளை கொண்டு செல்ல தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தையடுத்து பயணிகளின் பாதுகாப்பு கருதியே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்றிலிருந்து தனியார் பேருந்துகள் பொதிகளை பொறுப்பேற்க வேண்டாமென்றும் சாரதிகள், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ரயில்களிலும் பொதிகளை பொறுப்பேற்பது நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில் நிலைய பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.