குண்டு வெடிப்பு, வெளியான அதிர்ச்சி தகவல்

312 0

கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவங்களின் முதற்கட்ட விசாரணைகளின் போது இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கொழும்பிலுள்ள ஷங்ரி-லா ஹேட்டலில் நேற்று 2 பேர் 616 ஆவது இலக்க அறையில் தங்கியுள்ளனர்.

அதேநேரம், குறித்த இரண்டு சந்தேக நபர்களுமே இன்று விடுதியின் உணவகப் பகுதி மற்றும் மண்டபத்தில்இந்த குண்டுகளை வெடிக்க செய்துள்ளனர். குறித் விடயம் அங்கிருந்த கண்காணிப்பு காணொளிப் பதிவிலிருந்து தெரிய வந்துள்ளது.
இந்த குண்டுவெடிப்புக்கு 25 கிலோ எடையுள்ள சி-4 வெடிபொருள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

எனினும் தற்கொலைக் குண்டுதாரிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் தங்கியிருந்த அறையை உடைத்து பொலிஸ் அதிகாரிகள் சோதனையிட்டு அங்கிருந்து சில வெடி பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர்.

அந்தவகையில், தற்கொலைக் குண்டுதாரிகள் உள்நாட்டவர்களா வெளிநாட்டவர்களா என்பது உறுதி செய்யப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.