நாட்டில் பல்வேறுபட்ட பிரதேசங்களில் இடம்பெற்ற வெடிச்சம்பவங்களினால் இறந்தவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கின்றேன்.
இந்த வெடிச்சம்பவங்களுக்கு எனது கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை அசாதாரண சூழ்நிலையில் நாட்டின் அமைதியையும் சமாதானத்தையும் பாதுகாக்க நாட்டு மக்கள் அனைவரும் பொறுமையாக செயற்பட வேண்டும்.
நாடுபூராகவும் இடம்பெற்ற திட்டமிட்ட குண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டணை பெற்றுக்கொடுக்கப்படும். அதற்கான அதிகாரங்கள் பாதுகாப்பு அனுசரனைகள் அனைத்தையும் அரசாஙம் வழங்கியுள்ளது.
இந்த வெடிச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அலரிமாளிகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அவசர ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஏதிர்பாராத விதமாக திட்டமிடப்பட்ட வகையில் இன்று நாட்டில் இடம்பெற்ற வெடிச்சம்பவங்களினால் இறந்தவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கும் எனது ஆள்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கின்றேன்.
நாட்டில் தற்போது இடம்பெற்றுள்ள இந்த விபரீத நிலையானது நாட்டின் அமைதியையும் பொருளாதாரத்துக்கும் பாரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. விசேடமாக பிரதான ஆலயங்கள் மற்றும் விடுதிகளை இவ்வாறு குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டமையை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். நாட்டின் அமைதிக்கு இவ்வாறான சவால் ஏற்பட்டுள்ள நிலையில் நீதியை பாதுகாப்பதற்கு அனைவரும் தமது ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.
நீதியை பாதுகாப்பதற்கு சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு துறை , முப்படையினர் மற்றும் பொலிசாருக்கு அலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. முக்கியமான அமைச்சுக்கள் ஒன்றிணைந்து இந்த பிரச்சினைக்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடல்களையும் மேற்கொண்டுள்ளோம்.
இந்த கலந்துரையாலில் ஜனாதிபதி செயலாளர், நீதிபதி, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களின் முக்கியஷ்தர்கள் கலந்துக்கொணடிருந்தனர்.
இந்த வெடிச்சம்பவங்கள் தொடர்பில் விசேட பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகள் முடிவின் பின்னர் இதனுடன் சம்பந்தப்பட்டவர்ககள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நிச்சயமாக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான அதிகாரத்தையும் பாதுகாப்பு அனுசரனைகளையும் அரசாங்கம் பெற்றுக்கொடுத்துள்ளது.
அதேபோன்று இந்த தேசிய நெருக்கடி சந்தரப்பத்தில் அனைவரும் பொருமையுடன் செயற்பட்டு நாட்டின் சமாதானத்தை பாதுகாக்க வேண்டும். இறந்தவர்கள் தொடர்பான விபரங்ளை சேகரிக்கப்பட்டு வருவதுடன் இந்த வெடிச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்களின் விபரங்கள் குறித்து பொலிசார் மிகுந்த அவதானத்துடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.