நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து நாட்டின் பாதுகாப்பிட்காக சமூக வலைத்தலங்களின் செயற்படுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில் குறிப்பாக முகப்புத்தகம், வைபர் மற்றும் வட்ஸ்அப் ஆகிய சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை நாட்டில் இன்று காலை முதல் 8 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவங்களில் 187 பேர் கொள்ளப்பட்டுள்ளதுடன் 400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள தொடர் குண்டு வெடிப்பு சம்பங்களை மையப்படுத்தி போலியான தகவல்கள் பதிவேற்றப்படுகின்றமையினால் தற்காலிகமாக சமூக வலைத்தலங்களை முடக்க அரசாங்கத்தால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Share