விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய தமிழ் அரசியல் தஞ்சக் கோரிகளை மேலும் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறைவடைந்துள்ளது என்று சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
அந்த நாட்டின் குடிவரவுத்துறை செயலகத்தை மேற்கோள்காட்டி, சுவிட்சர்லாந்து இணையத்தளம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் மனித உரிமை நிலமைகள் முன்னேற்றம் அடைந்து வருகின்றன.
அரசாங்கம் ஒன்றுக் கூடுவதற்கான சுதந்திரம், கருத்து வெளியிடும் சுதந்திரம் உள்ளிட்டவற்றை பாதுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தநிலையில் சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோருகின்ற விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புகளை பேணிய ஈழ அகதிகள் தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், சுவிட்சர்லாந்தில் உள்ள ஈழ அகதிகளை நாடுகடத்துவதற்கான ஒப்பந்தம் ஒன்று அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அந்த நாட்டின் நீதி அமைச்சர் ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.