4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுகவில் விருப்பமனு விநியோகம் 6 மணிக்கு நேர்காணல்

385 0

4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் விருப்பமனு விநியோகம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

தமிழகத்தில், சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கு மே 19-இல் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பணிக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அதிமுக, அமமுக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு, திங்கள்கிழமை (ஏப்.22) வெளியாக வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் 4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் விருப்பமனு விநியோகம் இன்று தொடங்கியது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்பமனு விநியோம் நடைபெற்று வருகிறது.
ரூ25 ஆயிரம் கட்டணம் செலுத்தி விருப்பமனுவை பெற்று பூர்த்தி செய்து இன்று மாலை 5 மணிக்குள் தர வேண்டுமென அதிமுக தலைமை கேட்டுக் கொண்டுள்ளது. மாலை 5 மணிக்கு விருப்ப மனு தாக்கல் நிறைவடைந்தவுடன் மனு தந்தவர்களிடம் 6 மணிக்கு நேர்காணல் நடைபெறுகிறது.