குற்றத்தை ஒப்புக்கொண்டார் ரமித் றம்புக்வெல்ல

359 0

ranil-www-nethnews-lk00002-1கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய றம்புக்வெல்லவின் புதல்வரும் கிரிக்கட் வீரருமான ரமித் றம்புக்வெல்ல, தம்மீதான குற்றசாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

இதன்படி, அவருக்கு 29 ஆயிரம் ரூபா அபராதம் விதித்த கொழும்பு போக்குவரத்து நீதவான் நீதிமன்றம், தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்த வாகன அனுமதி பத்திரமும்  மீள கையளிக்கப்பட்டுள்ளது.

கவனயீனமாக வாகனத்தை செலுத்தியமை, விபத்தை தடுக்க முற்படாமை, மதுபோதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டிருந்தது.