மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிப்பார் என நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் தொடர்பில் தங்களுக்கு நம்பிக்கை உள்ளது.
எவ்வாறாயினும், மத்திய வங்கியின் பிணை மோசடிகள் குறித்த கலந்துரையாடல்களுக்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை நிதிச் சபை கூடவுள்ளது.
அதன்போது இந்த விடயம் தொடர்பிலும் ஆராயப்படும்.
அத்துடன், மத்திய வங்கி பிணை மோசடிகள் தொடர்பில் விஷேட தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன குறிப்பிட்டார்.