சிறீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் ஆகிய இருவரும் கைசெய்யப்படுவது உறுதியாகியுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
கோப் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்போது மத்தியவங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனின் ஊழல் வெளிப்படுத்தப்படும். அவ்வாறு அர்ஜூன் மகேந்திரன் ஊழலில் மாட்டிக்கொண்டாரானால் ரணில் விக்கிரமசிங்கவும் மாட்டிக்கொள்வார்.
கோப் குழுவின் அறிக்கைகளின் படி அர்ஜூன் மகேந்திரன் கைது செய்யப்படுவார். அவரைத் தொடர்ந்து பிரதமரும் நிச்சயம் கைது செய்யப்படுவார்; அதற்கு காரணம் அர்ஜூன் மகேந்திரனுக்கும் பிரதமருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.