இலங்கையில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்வையற்றவர்களாக இருக்கின்றார்கள் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 13ஆம் திகதி அனுட்டிக்கப்படவுள்ள சர்வதேச பார்வைகள் தினம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இலங்கை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித மகிபால தெரிவித்துள்ளார்.
உலகில் 285 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பல்வேறு பார்வைக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என உலக சுகாதார அமைப்பால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதிலும் 39 மில்லியன் பேர் பார்வையற்றவர்களாக உள்ளனர்.
இலங்கையைப் பொறுத்தவரையில் 15 இலட்சத்திற்கும் அதிகமானோர் ஏதோவொரு விதமான பார்வைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையற்றவர்களாக உள்ளனர். இவர்கள் தொடர்பாக நாங்கள் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் எனவும் தெரிவித்தார்.