பதுளை – வின்சன்ட் டயஸ் விளையாட்டு மைதானத்துக்கு பின்புறமாக உள்ள குப்பை மேட்டில் கடந்த மூன்று நாட்களாக பரவி வரும் தீ இன்னும் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை.
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதனை கட்டுப்படுத்துவதற்காக வான்படைக்கு சொந்தமான இரண்டு உலங்கு வானுர்திகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போது தீ முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை.
இந்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணிகளில் இராணுவத்தினர், வான்படையினர் மற்றும் தீயணைப்பு பிரிவினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த தீப்பரவல் காரணமாக பதுளை நகரில் அதிகமான புகைமண்டலம் சூழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக பதுளை நகரில் உள்ள 5 பாடசாலைகள் இன்று மூடப்பட்டன.
இதன்படி பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயம், கனிஸ்ட்ட சரஸ்வதி, அல் அதான் வித்தியாலயம், விகாரமஹாதேவி மகா வித்தியாலயம், ஊவா கல்லூரி, தர்மதூத ஆகிய பாடசாலைகளே மூடப்பட்டடுள்ளன.