யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை

321 0

swine-flu-720x480சர்வதேச லயன்ஸ் கழகமானது தனது மனித நேயப்பணியில் நூறு ஆண்டுகளை பூர்த்திசெய்கின்ற நிலையில் அதனை முன்னிட்டு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

இதனடிப்படையில் வடக்கில் கடந்த இறுதி யுத்தத்தின் போது பாதிக்கப்படவர்களில் முகத்தில் காயமேற்பட்டு அதனால் சேதமடைந்த பகுதிகளை மீள உருவாக்கும் பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சையை அவர்களுக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விஷேட மருத்துவ செயற்திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியளாலர் சந்திப்பு இன்று இடம்பெற்றது.

இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கனக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் பலர் காயமடைந்திருந்த நிலையில் அந்த காயங்கள் முகத்தில் ஏற்பட்டிருந்ததானால் அவர்களது முகத்தில் பல பகுதிகள் சேதமடைந்திருந்தன.

இதனால் முகங்கள் அவலட்சமானவர்களில் பலர் இன்னமும் திருமணம் செய்துகொள்ள முடியாமலும் சாதாரண வாழ்க்கையை வாழ முடியாமலும் வேலையொன்றை தேடிக்கொள்ள முடியாமலும் உள்ளார்கள்.

அதனை நிவர்த்தி செய்யும் வகையிலேயே தாம் இவ்வாறு மருத்துவ செயற்பாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளோம் என அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

இதன்படி இந்த சத்திரசிகிச்சையானது முற்றுமுழுதாக இலவசமாக செய்யப்படவுள்ளதுடன் முழுமையான சிகிச்சையளிக்கப்பட்டு பூரணமாக குணப்படுத்திய பின்பே நோயாளிகள் வீட்டிற்கு அனுப்படுவார்கள்.

அதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் 8,9,10 ஆகிய தினங்களில் யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக வைத்தியர்கள் நால்வர் உள்ளடங்கிய பதினைந்து பேர் கொண்ட குழுவினர் வருகைதரவுள்ளனர்.

எனவே சிகிச்சையை பெற்றுக்கொள்ள விரும்புவோர்  0718186185 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் அல்லது தெல்லிப்பழை வைத்தியசாலையில் நேடியாகவும் தொடர்புகொண்டு பதிவுசெய்து கொள்ள முடியும்.

சிகிச்சை தொடர்பானதும் அதற்கான முன்னாய்த்தங்கள் தொடர்பாகவும் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.