யாழ்ப்பாணம் மணற்காடு பிரதேசத்தில், கஞ்சா கடத்தில் ஈடுபட்ட ஒருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை மதுவரி திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து சுமார் 12 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
அதன் சந்தை பெறுமதி 25 இலட்சம் ரூபா என பருத்தித்துறை மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், கைது செய்யப்பட்டவரை பருத்தித்துறை நீதிவானிடம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.