அடுத்த வருடம் இலங்கையில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் விசாக தினம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சிறப்பு தூதுக்குழு ஒன்று எதிர்வரும் 18ஆம் திகதி இலங்கை வரவுள்ளது.
நீதி மற்றும் பௌத்த மத விவகார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் விசாக தின குழுவை அங்கத்துவப்படுத்தும் உறுப்பினர்களே இலங்கை வரவுள்ளனர்.
இந்த விஜயத்தின் போது அவர்கள், விசாக தினத்தின் தொனிப்பொருள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஆராயவுள்ளனர்.
அத்துடன் ஐக்கிய நாடுகளின் விசாக தின நிகழ்விற்காக அழைக்கப்படவுள்ள வெளிநாட்டு ராஜதந்திரிகள் தொடர்பில் இதன்போது தீர்மானிக்கப்படவுள்ளதாக நீதி மற்றும் பௌத்த மதவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.