இராணுவத்தின் நலன்புரி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. – ஜனாதிபதி மைத்திரி

338 0

625-500-560-350-160-300-053-800-900-160-90கடந்த அரசாங்கத்தை விட தற்போதைய அரசாங்கம் இராணுவத்தினருக்கான நலன்புரி நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினரின் கௌரவத்தை பாதுகாப்பதற்காக அரசாங்கம் பொறுப்புடன் செயலாற்றுவதாக அவர் குறிப்பிட்டார்.

ஓய்வு பெற்ற இராணுவத்தினரை மீண்டும் நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளில் ஈடுப்படுத்தி கொள்வதற்கான தேசிய செயற்திட்டத்தின் முதற்;கட்ட நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இதன்போது ஓய்வு பெற்ற சுமார் 50 இராணுவத்தினருக்கு தொழில்நுட்ப அதிகாரிகள் என்ற நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நியமனங்களின் மூலம் அரச சேவையின் புதிய நியமன  செயற்பாடுகளில் எந்தவித தடைகளும் ஏற்படாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.