தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வரட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சுமார் 150க்கும் அதிகமான சிறிய நீர்ப்பாசன குளங்கள் வற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமநல சேவைகள் அபிவிருத்தி திணைக்கள மாவட்ட பிரதி ஆணையாளர் எஸ். சிவலிங்கம் இதனை தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 386 சிறிய நீர்ப்பாசன குளங்கள் உள்ளன.
இவற்றுள் 212 சிறிய குளங்கள் நீர்ப்பாசன வசதிகளை பெற்றுக் கொள்ள கூடிய வகையில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்
இதேவேளை, இந்த மாவட்டத்திலுள்ள 13 நடுத்தர நீர்ப்பாசன குளங்களில் அதிகமான குளங்கள் வற்றிவிட்டதாக மாகாண நீர்ப்பாசனத்திணைக்கள பிரதிப்பணிப்பாளர் பி.வடிவேல் தெரிவித்தார்.
அத்துடன் பெரிய நீர்ப்பாசன குளங்களான உன்னிச்சை, உறுகாமம், நவகிரி, வாகனேரி ஆகியவற்றின் நீர்மட்டம் குறைவடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.