அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு – 2016

441 0

k800_img_0609அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினால் 15வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக பொதுப்பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடாத்தப்படும் தமிழ்க்கலைத் தேர்வின் அறிமுறைத்தேர்வானது இன்று பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மன், டென்மார்க், இத்தாலி, சுவிஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்றது.

11 தேர்வு நிலையங்களில் தரம் இரண்டு தொடக்கம் ஆற்றுகைத்தரம் வரை நடைபெற்ற இத்தேர்வில் 1500ற்கும் மேற்பட்ட மாணவர்கள் தோற்றியிருந்தார்கள்.தேர்வு நடுவர்களாக ஆற்றுகைத்தரத்தினை நிறைவு செய்த பெருமளவான இளம் ஆசிரிய மாணவர்களும், தமிழ்க்கலை ஆசிரியர்களும், நாடுகள் நிலை கல்விப்பணியக தேசிய செயற்பாட்டாளர்களும் கடமையாற்றியிருந்தார்கள்.

தேர்விற்குத் தோற்றிய மாணவர்களிற்கான செய்முறைத்தேர்வு இம் மாத இறுதிப்பகுதியில் இருந்து டிசம்பர் மாதம் வரை நடைபெறுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.தேர்வு சிறப்புற நடைபெற ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றது.

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்.
09.10.2016
k800_img_0584

k800_img_0586

k800_img_0612

img-20161009-wa0008

img-20161009-wa0007

img-20161009-wa0006_1

img-20161009-wa0005

img-20161009-wa0003

img-20161009-wa0002