தோட்டத்தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக யாழில் ஆர்ப்பாட்டம்(காணொளி)

471 0

jaffnaபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தம் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சமூக நிதிக்கான வெகுஜன அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தம் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும் பெருந்தோட்ட தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் 730 ரூபா சம்பள உயர்வுக்கான இணக்கப்பாடே எட்டப்பட்டுள்ளது.

அத்துடன் ஊழியர் சேமலாய நிதியம் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியன இணைக்கப்பட்டு 817 ரூபா சம்பளம் நாளாந்தம் வழங்குவதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்திருந்தது.

எனினும் அரசியல்வாதிகளினால் முன்வைக்கப்பட்ட ஆயிரம் ரூபா சம்பள உயர்வை தமக்கு பெற்றுத் தர வேண்டும் என மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

இதன்பிரகாரம் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான தீர்மானமிக்க பேச்சுவார்த்தை கொழும்பில் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.