புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதிதிரட்டும் நடைபயணம் இன்று மாங்குளத்தைச் சென்றடைந்தது.
புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதிதிரட்டும் நடைபயணம் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன், நேற்று இரணைமடு சந்தியில் முடிவடைந்தது.
இன்று காலை இரணைமடு சந்தியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த நடைபயணம் மாங்குளம் சென்றடைந்தது.
இன்றைய பயணத்தில் கிரிக்கெட் வீரர் மகேல ஜெயவர்த்தன, கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த நடைபயணத்தில், முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடும் இடம்பெற்றிருந்தது.