உதய கம்மன்பிலவிற்குப் பிணை

427 0

udaya-gammanpilஅவுஸ்திரேலிய பிரஜையொருவருக்கு சொந்தமான நிறுவனமொன்றின் பங்குகளை மோசடியான முறையில் எட்டோனி பத்திரத்தின் ஊடாக விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மீதான விசாரணைகள் கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி பத்மினி என் ரணவக்கவினால் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்படி, 20 லட்சம் ரூபா விதமான இரண்டு சரீர பிணைகளில் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில விடுவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், இந்த மாதம் 13ஆம் திகதி முதல் 3ஆம் திகதி வரையான காலப் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினருக்கு இந்தியா செல்லவும் நீதிமன்றம் இதன்போது அனுமதி வழங்கியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நீதிமன்றத்தில் விடுத்த வேண்டுக்கோளுக்கு அமையவே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.