காக்கைதீவில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள மீன் விற்பனை நிலையத்தை நிறுத்தக் கோரிக்கை(காணொளி)

484 0

kakkai-teevuஇறங்குதுறையில் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கின்ற மீன் விற்பனை நிலையத்தினை நிறுத்துமாறு யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேச சபையினால் காக்கை தீவு இறங்குதுறையில் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கின்ற மீன் விற்பனை நிலையத்தினை நிறுத்துமாறு கிராமிய கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் தலைவர் நாகநாதி பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

காக்கைதீவு இறங்கு துறையானது நங்கூரமிடும் துறைமுகமாக 2017ஆம் ஆண்டு முழுமையாக அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை மொறட்டுவ பல்கலைக்கழகம், கடற்றொழில் அமைச்சு மற்றும் புனர்நிர்மாண அமைச்சு ஆகியன இணைந்து மேற்கொள்ளவுள்ளன.

இந்நிலையில் மானிப்பாய் பிரதேச சபையினால் அமைக்கப்படவுள்ள மீன் விற்பனை நிலையத்தினை நிறுத்துமாறு கூட்டுறவுச் சங்க சமாசங்களின் தலைவர் நாகநாதி பொன்னம்பலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட மீன் சந்தையானது பயன்பாடற்ற நிலையில் காணப்படுகின்றமையால் பொது மக்களின் பணம் வீணடிக்கப்படுவதாகவும் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் தலைவர் நாகநாதி பொன்னம்பலம் குற்றம் சுமத்தினார்.