ஐ.நா சித்ரவதைக்கு எதிரான நாளான 26 ஜுன் 2016 ஞாயிறு மாலை 6 மணியளவில் மதுரை, செல்லூர் 60 அடி சாலையில் தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் கூட்டம் பறை இசையுடன் தொடங்கியது. நிகழ்வில் தோழர். அரங்க குணசேகரன் தலைவர் – தமிழக மக்கள் முன்னணி , தோழர். பரிதி தமிழ் தமிழர் இயக்கம், தோழர் கிட்டு ராசா த.பெ.தி.க , மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் பிரவீன் மற்றும் தோழர் அருள்முருகன் ஆகியோர் உரையாற்றினார்கள். தோழர். நாகராஜ் நன்றி தெரிவித்தார். மதுரையில் உள்ள பல்வேறு தோழமை இயக்க தோழர்கள் இணைந்து நினைவு சுடர் ஏற்றினர். அத்துடன் மாவீரன் முத்துக்குமார், இசைப்பிரியா & பாலச்சந்திரனின் புகைப்படத்திற்கு தோழர்கள் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர். பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி தமிழீழதில் இனப்படுகொலை ஆனவர்களை நினைவேந்தி வீரவணக்கம் செலுத்தினர். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஜுன் 26 நினைவேந்தல் கூட்டம் மதுரையில் மே பதினேழு இயக்கம் நடத்தியுள்ளது.