தேசிய ஊடக மத்திய நிலையத்தின் தலைவர் மகாநாயக்கர்களுடன் சந்திப்பு

333 0
de15c2866dc7a06fe73e0922715c4d8b_xlதேசிய ஊடக மத்திய நிலையத்தின் தலைவரும் முன்னாள்; ஊடகத்துறை அமைச்சருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் கண்டியில் மகாநாயக்கர்களை சந்தித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தேசிய ஊடக மத்திய நிலையம் அமைக்கப்பட்டதன் நோக்கம் ஊடகங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு தேவையான வழிகாட்டலை வழங்குதல் மற்றும் அரசாங்கம் முன்னெடுக்கும் பணிகள் தொடர்பில் பொதுமக்களுக்கு சிறந்த முறையில் தெளிவுபடுத்துவதே நோக்கம் ஆகும் என்று தேசிய ஊடக மத்திய நிலையத்தின் தலைவரும் முன்னாள் ஊடகத்துறை அமைச்சருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் மாகாநாயக்கர்களை சந்தித்தபோதே ஊடக மத்திய நிலையத்தின் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.மகாநாயக்கர்களின் கேள்விக்கு பதிலளத்த அவர் .அரசாங்கத்தின் அபிவிருத்தி தொடர்பான விடயங்களை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும்போது அரச தகவல் திணைக்களத்தை தொடர்புபடுத்தி விரிவான தெளிவுபடுத்தும் நடவடிக்கைக்கு திட்டமிடப்படுவதாகவும் ஊடக மத்திய நிலையத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
தேசிய ஊடக மத்திய நிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளும் முயற்சி என சிலர் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக தேசிய ஊடக மத்திய நிலையத்தின் தலைவரும்முன்னாள் ஊடகத்துறை அமைச்சருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் தெரிவித்தார்.
நல்லாட்சியை கட்டியெழுப்புவதற்காக ஊடகத்தின் மூலம் நிறைவேற்றப்படவேண்டிய பொறுப்பை புரிந்துகொண்டு தான் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். மல்வத்து மாகாநாயக்கர் திப்பட்டுவாவே சிறிசித்தார்த்த சுமங்கலதேரர் அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கர் வறகாகொட ஞானரதன தேரர் ஆகியேரை சந்தித்து நல்லாசியை தேசிய ஊடக மத்திய நிலையத்தின் தலைவர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் பெற்றுக்கொண்டார்.
இலங்கை ராமாண்ய பீடத்தின் மகாநாயக்கர் நாபான பிறேமசிறி தேரரை சந்தித்து நல்லாசி பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலன்சூரியவும் கலந்துகொண்டார்.