ஆஸ்திரேலியா இரவு விடுதி அருகே துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

348 0

அமைதிப் பூங்காவாக திகழும் ஆஸ்திரேலியா நாட்டின் இரவு விடுதி அருகே மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 4 பேரில் ஒருவர் உயிரிழந்தார்.

உலகில் மக்கள் பாதுகாப்பாக வாழ உகந்த நாடுகளில் ஒன்றாக அறியப்படும் ஆஸ்திரேலியாவில் நீடித்த நிலையான ஆட்சிமுறை மற்றும் வாழ்வாதாரத்துக்கு பாதுகாப்பான அம்சங்கள் போன்றவற்றுக்கு உத்தரவாதம் உள்ளதால் வெளிநாடுகளுக்கு சென்று வாழ விரும்புபவர்களின் விருப்பத்தேர்வாக இந்நாடு விளங்குகிறது.

மேலும், வன்முறை, துப்பாக்கி கலாச்சாரத்தால் உயிருக்கு அச்சுறுத்தல் போன்றவையும் ஆஸ்திரேலியாவில் மிகவும் குறைவு.

கடந்த 1996-ம் ஆண்டில் இங்குள்ள போர்ட் ஆர்த்தர் பகுதியில் ஒருவர் நடத்திய வெறித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 35 பேர் உயிரிழந்தனர். கடந்த மார்ச் மாதத்தில் நடந்த 4 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 5 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலியா தலைநகர் மெல்போர்ன் நகருக்கு உட்பட்ட பிரஹான் பகுதியில் உள்ள இரவு விடுதி வாசலில் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் முன்னர் தெரிவித்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.