இலங்கையில் காலநிலை நெகிழ்வுத்திறன் மற்றும் சிறு விவசாயிகளுக்கான விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்தும் நோக்கில் உலன வங்கி கடனுதவி வழங்கவுள்ளது.
அவ்வகையில், பொது – தனியார் பங்காண்மை ஊடாக முன்னுரிமைக்குரிய உட்கட்டமைப்புகளுக்கு ஆதரவளிக்கவும் இலங்கையும் உலக வங்கியும் 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (2,620 கோடி இலங்கை ரூபா) பெறுமதியான இரண்டு புதிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளன.
தெற்காசியப் பிராந்தியத்திற்கான உலக வங்கியின் துணைத்தலைவர் ஹார்ட்விக் ஸ்காவர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி. ஆர். ஏச்.எஸ்.சமரதுங்க ஆகியோர் முறையே உலக வங்கி மற்றும் இலங்கை அரசாங்கம் சார்பாக இந்த ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டனர்.
வொஷிங்டனில் இடம்பெற்றுவரும் 2019ஆம் ஆண்டிற்கான உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வசந்த கால சந்திப்புக்களின் போது நிதி இராஜாங்க அமைச்சர் ஏரான் விக்கிரமரத்னவின் பிரசன்னத்தில் இந்த ஒப்பந்தம் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) கைச்சாத்திட்டப்பட்டது.
இந்த ஒப்பந்த திட்டம், நெகிழ்திறனையும் நாட்டிலுள்ள உலர் வலயங்களில் உள்ள 6 மாகாணங்களைச் சேர்ந்த 470,000இற்கும் மேற்பட்ட சிறு விவசாயிகளது விவசாய உற்பத்தித் திறனையும் மேம்படுத்த உதவும்.
அத்துடன், எதிர்கால அபிவிருத்தி முன்னுரிமைகளுக்கான மூலதனங்களை ஈர்க்கவும் அவற்றை நிலைபேறானதாக்கவும் தேவையான அடித்தளத்தை இலங்கை அரசாங்கம் விருத்திசெய்வதற்கு உதவும்.
இதுகுறித்து உலக வங்கியின் துணைத்தலைவர் ஹார்ட்விக் ஸ்காவர் தெரிவிக்கையில், “இலங்கை மேல் மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டுகின்ற நாடாக மாறும் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது என்று தெரிவித்தார்.
இதனை உறுதிப்படுத்துவதற்கு இந்த வளர்ச்சியானது நிலைபேறானதாகவும் கட்டுபடியானதாகவும் , நெகழ்திறனுடையதாகவும் இருப்பதை உறதிப்படுத்துவதற்கு உட்கட்டுமானம் மற்றும் விவசாயத்துறையில் காலநிலை நலிவு நிலைமையால் ஏற்படும் தாக்கங்களை எதிர்கொள்வதற்கும் ஏற்றவகையில் இந்த இரண்டு திட்டங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
காலநிலைக்கு தாக்குபிடிக்கக்கூடிய திறன்மிக்க நீர்பாசன விவசாயத் திட்டம் விவசாய கிராமிய பொருளாதார விவகாரம் இ கால்நடை அபிவிருத்தி , நீர்ப்பாசனம்; மீன்பிடி மற்றும் நீரியல்வள. அமைச்சினாலும் இதில் பங்கேற்கும் ஆறு மாகாண சபைகளாலும் நடைமுறைப்படுத்தப்படும். சர்வதேச அபிவிருத்தி சங்கத்திடமிருந்து ( இன்டர்நஷனல் டெவலொப்மன்ற் அஸோஸியேஸன் ) 125 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவி இலங்கை அரசாங்கத்திடமிருந்து 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பங்களிப்பு மற்றும் திட்டப்பயனாளர்களிடமிருந்து 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பங்களிப்பு உள்ளடங்கலாக இந்தத்திட்டத்திற்கான மொத்த பெறுமதி 140 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
இந்த திட்டம் விவசாயிகள் பயிற்சிகளைப் பெறுவதற்கும் ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் வழிவகைசெய்வதற்கு ஆதரவளிக்கும். தற்போது 10 சதவீதமான பெண்கள் மாத்திரமே இதன் மூலமாக நன்மையடைகின்றனர். இந்த திட்டமானது இடைவெளியைக் குறைப்பதற்கு துணைசெய்வதுடன் விவசாயத்துறையில் பணியாற்றும் ஆண்களதும் பெண்களதும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கு வழிகோலும்’ என உலக வங்கியின் மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான வதிவிடப்பணிப்பாளர் ஐடா ஸ்வராய் ரிடில்கொவ் தெரிவித்தார்.
பணத்திற்கு பெறுமதியளிப்பதை உறுதிப்படுத்தும் போட்டித்தன்மைமிக்க கொள்முதல் நடைமுறைகளுடாக தெரிவுசெய்யப்படும் முன்னுரிமைக்குரிய திட்டங்களில் தனியார் துறையினர் முதலீடு செய்வதை ஊக்குவித்தல் பொது – தனியார் பங்காண்மை திட்டத்திற்கு ஆதரவளிக்கும் கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் உட்கட்டுமான நிதியளித்தலின் முக்கியமான கொள்கையாகவுள்ளது. இந்த திட்டத்தை நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு பொது-தனியார் துறை பங்காண்மைக்கான தேசிய முகவர் அமைப்புடன் இணைந்து நடைமுறைப்படுத்தும். 25மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவியானது 9வருட கருணைக்காலம் மற்றும் 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சகா நிதியளிப்பு உள்ளடங்கிலாக 20வருடகால முதிர்ச்சியைக் கொண்டுள்ளது.