இந்தியா கடந்த மார்ச் 27-ந்தேதி விண்வெளியில் உள்ள செயற்கைகோளை ஏவுகணை மூலம் தாக்கி அழித்தது. இதன்மூலம் இந்த தகுதி பெற்ற 4-வது நாடாக இந்தியா உயர்ந்துள்ளது.
அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் இதுகுறித்து இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
அமெரிக்க கமாண்டர் ஜெனரல் ஜான் ஹைடன் கூறும்போது, “இந்தியாவின் செயற்கைகோள் மீதான தாக்குதலில் முதல் பாடம் அவர்கள் ஏன் இதை செய்தார்கள்? என்ற கேள்வி தான். இதற்கு பதில், தங்கள் நாட்டுக்கு விண்வெளியில் இருந்து அச்சுறுத்தல் வரலாம் என கருதியிருக்கலாம் என நான் நினைக்கிறேன். இதன்மூலம் விண்வெளியில் அவர்கள் தற்காப்பு தகுதியுடன் இருப்பதாக கருதுவார்கள்” என்றார்.