ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் மங்கள சமரவீரவைச் சந்தித்தார்!

319 0

un-special-raporter-rita-mangalaபத்து நாட்கள் பயணம் மேற்கொண்டு சிறிலங்கா வந்த சிறுபான்மையினர் உரிமைகளுக்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ரிட்டா ஐசக் டியாயே சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

போருக்குப் பின்னர் சிறீலங்காவின் நிலமைகளை மதிப்பீடு செய்வதற்கான சிறுபான்மையினர் உரிமைகளுக்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ரிட்டா ஐசக் நேற்று கொழும்பை வந்தடைந்தார்.

நேற்றையதினம் (திங்கட்கிழமை) அவர் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்து இன, மத சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பாக பேச்சுக்களை நடாத்தியுள்ளார்.

அத்துடன் அவர் யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களுக்குச் சென்று அரசாங்க அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

எதிர்வரும் 20 ஆம் திகதிவரை சிறீலங்காவில் தங்கவுள்ள ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ரிட்டா ஐசக், பல பிரசேதங்களுக்குச் சென்று ஆய்வுகளை நடாத்தவுள்ளதுடன், தனது சிறீலங்காவின் பயணம் தொடர்பான அறிக்கையை எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐநா கூட்டத்தொடரில் வெளியிடுவார்.