யாழில் மீண்டும் அதிகரிக்கும் பொலிஸ், விசேட அதிரடிப்படையின் சோதணை கெடுபிடிகள்

305 0

photo-1யாழ்.மாவட்டத்தில் மீண்டும் அதிகரித்ததுச் செல்லும் வன்முறை கலாசாரம் மற்றும் போதைப் பொருள் கடத்தல்களை அடுத்து பொலிஸ், விசேட அதிரடிப் படையினரின் சோதணை, ரோந்து நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
யாழ்.நகரப்பகுதி மற்றும் அதனை அண்மித்துள்ள கரையோரப் பகுதிகளில் இப் பாதுகாப்பு சோதணைக் கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை பொது மக்கள் மத்தியில் அச்ச உணர்வினையும் ஏற்படுத்தியுள்ளது.
யாழ்.மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக இறுக்கமான சட்ட நடமுறைகள் கொண்டுவரப்பட்டதை அடுத்து வாள்வெட்டு, போதைப் பொருள் கடத்தல்கள் மற்றும் சமூகத்திற்க ஒவ்வாத செயற்பாடுகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.
இருப்பினும் தற்போது மீடும் முன்னர் இருந்தது போன்ற வன்முறைக் சலாசாரம் மற்றும் போதைப் பொருள் கடத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
குறிப்பாக ஒவ்வொரு வாரமும் பொலிஸாரினால் பெரும் தொகையாக கடத்தப்படும் கஞ்சாக்கள் மீட்கப்பட்டுகின்றன.

photo-2
மேலும் கட்டுப்பாட்டிற்குள் இருந்து வாள்வெட்டு சம்பவங்கள், கோஸ்ரி மோதல்கள் போன்ற வன்முறை கலாசாரங்கள் அதிகரித்துச் செல்லுகின்றது. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ்.நகரப் பகுதியில் வைத்து சகோதரர்கள் மீது சரமாரியான வாள்வெட்டுச் சம்பவம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து முச்சக்கர வண்டி ஒன்றும் தீயிட்டு எரிக்கப்பட்டு நாசம் செய்யப்பட்டிருந்தது. இதுமட்டுமல்லாமல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வன்முறைகளில் உச்சக் கட்டமாக யாழ்ப்பாணம் கொக்குவில் – பிரம்பரி வீதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றும் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் பெரும்பாலனவர்கள் கைது செய்யப்படாமல் உள்ள நிலையில் இது தொடர்பாக பொது மக்கள் மத்தியில் மீண்டும் ஒரு அச்சமான நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

photo-3
இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள், போதைப் பொருள் கடத்தல்களை அடுத்து அவற்றினை கட்டுப்படுத்தும் முகமாக பொலிஸாரும், விசேட அதிடிப் படையினரும் தீவிரமாக களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ள இவர்கள், யாழ்.நகரிலும், அதணை அண்மித்த பகுதிகளிலும், விசேட ரோந்து மற்றும் தீவிர சோதணை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக வீதிகளில் பெருமளவில் குவிக்கப்படும் பொலிஸார் ஒரு வாகனங்களை கூட விடாது தீவிர சோதணை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.