போதைப்பொருள் பாவனைக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
போதையற்ற உலகம் என்ற தொணிப்பொருளின்கீழ் இந்த ஆர்ப்பாட்டம் நேற்று போரதீவுப் பற்றுப் பிரதேச சபையில் கடமை புரியும் அரச உத்தியோகஸ்த்தர்களால் முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நாட்டிற்காக ஒன்றிணைவோம் என்ற தேசிய திட்டத்திற்கு அமைவாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ‘போதையில் மோதி பாதையை மாற்றாதே’, ‘புகையிலையை நிறுத்தி புதுயுகம் படைப்போம்’, ‘புகை மனிதனுக்குப் பகை’, ‘கிழக்கில் போதைக்கான ஒரு நாள் செலவு நாப்பது இலட்சம் ரூபாய்’, ‘மனிதா விழி மதுவை ஒழி’, ‘மதுவின் வாசம் மரணத்தின் சத்தம்’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.