டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நடிகர் ரயன் வேன் ரோயன் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் வெலிகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நடிகர் ரயன் வேன் ரோயன் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து இன்றையதினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.