மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தலில் முகமது நஷீத் கட்சி அமோக வெற்றி!

420 0

மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தல், கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. முழுமையான தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

முன்னாள் அதிபர் முகமது நஷீத்தின் மாலத்தீவு ஜனநாயக கட்சி மொத்தம் உள்ள 87 தொகுதிகளில்  65 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இது, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை விட அதிகம் ஆகும்.

ஜமூரி கட்சி, மாலத்தீவு முற்போக்கு கட்சி ஆகியவை தலா 5 தொகுதிகளிலும், சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 12 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. மாலத்தீவில் ஜனநாயகம் திரும்பச் செய்வேன் என்று முகமது நஷீத் கூறினார்.

முகமது நஷீத், பயங்கரவாத வழக்கு தொடரப்பட்டதால், வெளிநாட்டில் தஞ்சம் அடைந்தவர். அந்த வழக்கை மாலத்தீவு சுப்ரீம் கோர்ட்டு கடந்த நவம்பர் மாதம் ரத்து செய்த பிறகுதான் அவர் மாலத்தீவுக்கு திரும்பினார்.