ஐ.தே.க தேர்தல் விஞ்ஞாபனத்தில் நிறைவேற்று அதிகாரம் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் – அஜித்

219 0

அரசியலமைப்பினூடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரம் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினூடாக பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

ஆனால் நிறைவேற்று அதிகாரம் யாப்பிலிருந்து முழுமையாக அகற்றப்பட வில்லை என்பதை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக நீக்குவதே ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடாக அமைவதுடன் எதிர்வரும் ஜனாதபதி தேர்தலுக்கான விஞ்ஞாபன வரைபின்போது நிறைவேற்று அதிகாரம் தொடர்பிலும் முக்கிய அவதானம் செலுத்தபடாலாம் என்று அமைச்சர் அஜித் பி. பெரேரா குறிப்பிட்டார். 

நிறைவேற்று அதிகாரம் தொடர்பில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கவனத்தில் கொள்ளப்படுமா என்பது தொடர்பில் விளக்கமளிக்கும் போதே இதனை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, 

ஜனாதிபதியின் அதிகாரம் அரசியலமைப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும். அந்த நிலைபாட்டிலேயே ஐக்கிய தேசிய கட்சி உள்ளது. நிறைவேற்று அதிகாரத்தை முற்றுப்புள்ளி வைக்கப்பட்டால் மாத்திரமே வினைத்திறன் மிக்க சகல சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு ஏற்ற ஆட்சியை உருவாக்க முடியுமென அவர் குறித்த கலந்துரையாடலில் தெரிவித்தார்.