மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது

268 0

பொகவந்தலாவ  பகுதியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில்  ஈடுபட்ட  ஆறு  பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிசார்  தெரிவித்தனர். 

பொகவந்தலாவ  –  பெட்ரோசோ தோட்டத்தில் சட்டவிரோதமான  முறையில்  மாணிக்கக்கல்  அகழ்வு  இடம்பெறுவதாக நேற்று நள்ளிரவு  12.45 மணியளவில் பொலிசாருக்கு  கிடைக்கப்பெற்றது.  இதற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவளைப்பின்  போதே இந்த  கைது நடவடிக்கை  இடம்பெற்றுள்ளது.   

இதன்  போது  சந்தேக நபர்களிடமிருந்து  மாணிக்கக்கல் அகழ்விற்கு  பயன்படுத்தப்படும்  உபகரணங்களும்  மீட்கப்பட்டுள்ளன. சந்தேக  நபர்கள் பொகவந்தலாவ  பகுதியை  சேர்ந்தவர்கள்  என விசாரணைகளின்  போது  தெரியவந்துள்ளது.  

இதேவேளை , சந்தேகநபர்கள்  பொலிஸ் பிணையில்  விடுவிக்கப்பட்டுள்ளதுடன்,  அவர்களை  எதிர்வரும்  23ஆம் திகதி   ஹட்டன்  நீதவான் நீதிமன்றத்தில்  ஆஜராகுமாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவம்  தொடர்பிலான  மேலதிக விசாரணைகளை  பொலிசார்  மேற்கொண்டு  வருகின்றனர்.