தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவிசிரிபுற பகுதியிலுள்ள வீடொன்று இன்று காலை உடைக்கப் Uட்டு அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
குறித்த வீட்டிலிருந்து ரூ 2 இலட்சத்திற்கு மேல் பெறுமதியுடைய தங்க நகைகள் உட்பட சில பொருட்கள் களவு போயுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளதாகவும் வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.
வீட்டு உரிமையாளரின் முறை பாட்டினை தொடர்ந்து பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளதோடு சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை
திருட்டு சம்பவம் நடைபெற்ற போது குறித்த வீட்டில் மட்டுமன்றி அயலவர்கள் எவரும் அங்கு இருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.