மரண தண்டனையை இரத்துச் செய்யுமாறு ஐரோப்பிய சங்கத்தின் பிரதிநிதிகள் குழு மீண்டும் இலங்கைக்கு வலியுறுத்தியுள்ளது.
2018 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் பொது சம்மேளனக் 73 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை இணக்கம் தெரிவித்ததன் அடிப்படையில் மரண தண்டனை தொடர்ந்தும் அமுலாக்கத்தை இரத்துச்செய்யம் என எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
பிரான்ஸ், ஜெர்மன், இத்தாலி, நெதர்லாந்து, ரோமேனியா, நோர்வே, மற்றும் சுவிட்ஸலாந்தின் தூதுவராலயம், ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஆகியவற்றின் இணக்கத்துக்கு அமைய ஐரோப்பிய ஒன்றியம் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு எதிரான கொள்கைக்கமைய 43 வருடங்களின் பின்னர் இலங்கையில் மரண தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளததாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிகிகள் தெரிவித்துள்ளனர்.
வேகமாக வளர்ந்து வரும் போதைப்பொருள் வர்த்தகம் உலகளாவிய ரீதியில் பாரிய பிரச்சினை எனவும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டம் என்பதை ஒத்துழைப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் மரண தண்டனை என்பது இதற்கான சரியான முடிவு இல்லை எனவும் போதைப்பொருளை ஒழிப்பு தொடர்பில் தங்களுக்கு இருக்கும் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.