எமது அன்பிற்கும் மதிப்பிற்குரிய தமிழீழ உறவுகளே! உங்கள் அனைவருக்கும் எழுச்சிகரமான வணக்கத்தைத்தெரிவித்து.அக்டோபர் 10ம் நாளான இன்று உலகம் முழுவதும் பரவி வாழும் ஈழத்தமிழர்களினால் தமிழீழ பெண்கள் எழுச்சி நாள் கொண்டாடப்படுகின்றது. இது 1987 அக்டோபர் 10 அன்று வீரகாவியமான 2ம் லெப். மாலதியின் நினைவாகவே கொண்டாடப்படுகின்றது.
உலகின் எந்தவொரு பகுதியில் யுத்தம் நடைபெற்றாலும் முதலில் பாதிக்கப்படுவது பெண்களே. அதேபோல்தான் தமிழீழத்தின் மீது சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புகளினால் தமிழீழபெண்களும் பாதிக்கப்பட்டுவருகின்றார்கள். இவற்றிக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் முகமாகவும், பெண்களின்பாதுகாப்பிற்காகவும், சமுக கட்டமைப்புக்களை காப்பதற்காகவும் தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன்அவர்களால் பெண்கள் தமிழீழ விடுதலைப் போரில் இணைத்துக்கொள்ளப்பட்டார்கள்.
அவ்வாறே தன்னையும் தமிழீழ விடுதலைப்போரில் இணைத்துக்கொண்ட மன்னார் மாவட்டத்தை சேர்ந்த மாலதி எனப்படும் சகாயசீலி பேதுருப்பிள்ளை மண் விடுதலைக்கு மட்டுமல்லாது பெண் விடுதலைக்காகவும் போராடி வந்தார். 1987அக்டோபர் 10ம் திகதி கோப்பாயில் இந்திய இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் இடம்பெற்ற நேரடிச்சமரில் 2ம் லெப். மாலதி வீரகாவியமானார். இவரே முதல் பெண் மாவீரராவர்.
இவரின் வீரமரணமானது ஆணாதிக்கத்தின் பிடியிலும், சமுகத்தின் பிடியிலும் சிக்குண்டிருந்த தமிழீழ பெண்களிடம் பேரெழுச்சியை தோற்றுவித்திருந்தது. இப் பேரெழுச்சயானது பெண்கள் தம்மை தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக்கொள்ள ஓர் ஊன்றுகோளாக அமைந்திருந்தது. போராட்டத்தில் இணைந்துகொண்ட பெண்கள் களத்தில் ஆண்போராளிகளுக்கு நிகராகவும் சமுதாயத்தில் பெண் விடுதலைக்காகவும் போராடி வாகை சூடினார்கள்.
ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகளினால் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட காலத்தின் பின்னர் அதாவது 2009ஆம் ஆண்டிற்கு பின்னர் தமிழீழ பெண்கள் சொல்லெனா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இவற்றிக்கெல்லாம் ஒரே தீர்வு தமிழீழமாகும். காலமிட்ட கட்டளைப்படி வரலாறிட்ட வழியில் தமிழீழம் வெல்லும் வரை போராடுவோமென தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளான இன்று தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி உறுதியெடுத்துக்கொள்கின்றது.
நன்றி
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்