2019 இல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சுமார் 4 சதவீதமாக அமையும் -மத்திய வங்கி

385 0

இவ்வருடத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4 சதவீதத்தை அண்மித்ததாகவும், பணவீக்கம் 5 சதவீதமாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தி 9 சதவீதமாகவும் அமையும் என்று மத்திய வங்கி எதிர்பார்ப்பதாக ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.

அந்தவகையில் கடந்த 2018 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.2 சதவீதமாக அமைந்திருந்த அதேவேளை, ரூபாவில் அதன் மதிப்பு 14,450 பில்லியன் ரூபாவாக காணப்படுகின்றது.

மேலும் விவசாயத்துறையைப் பொறுத்தவரையில் 2017 ஆம் ஆண்டில் -0.4 சதவீதமாகக் காணப்பட்ட வளர்ச்சிவீதம், கடந்த ஆண்டில் 4.8 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. எனினும் 2017 இல் 4.1 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்திருந்த கைத்தொழில்துறை, கடந்த ஆண்டு 0.9 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டிருக்கின்றது. 

அத்தோடு கடந்த ஆண்டுக்கான கைத்தொழில்துறையின் வளர்ச்சிவீதம் 4.7 ஆகப் பதிவாகியிருக்கின்றது.

மேலும் இவ்வருடம் ஏப்ரல் மாதம் வரையிலான ஏற்றுமதி வருமானம் 7.2 சதவீதமாக இருப்பதுடன், அதில் ஆடை ஏற்றுமதி முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதேபோன்று சுற்றுலாப்பயணிகளின் வருகை மூலமாக 458.6 மில்லியன் அமெரிக்க டொலரும், வெளிநாட்டில் தொழில்புரியும் தொழிலாளர் பண அனுப்பல்களின் மூலம் 1045.8 மில்லியன் அமெரிக்க டொலரும் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரூபாவின் பெறுமதி இன்று வரையில் 4.5 சதவீதத்தால் அதிகரித்திருப்பதுடன், இவ்வருடத்தில் பொருளாதார வளர்ச்சி 4 சதவீதத்தை அண்மித்ததாகவும், பணவீக்கம் அ5 சதவீதமாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தி 9 சதவீதமாகவும் அமையும் என்று மத்திய வங்கி எதிர்பார்ப்பதாக ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி குறிப்பிட்டார்.