கிரிக்கெட் பந்து தலையில் பட்டு, மரணத்தை தழுவிய அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸின் மரணத்தை தவிர்த்திருக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளில் இருந்த இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அவரின் மரணம் தொடர்பில் 5 நாட்கள் அறங்கூறுனர் சபை விசாரணை மேற்கொண்டது.
இதன்போது, கிரிக்கெட் பந்து அவரின் தலையில் பட்ட நிலையில் இருந்து பிலிப் ஹியூக்ஸின் மரணத்திற்கான செயற்பாடுகள் ஆரம்பித்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு நெவம்பர் மாதம் 25ஆம் திகதி, சிட்னியில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியின் போது, பிலிப் ஹியூக்ஸ் தலையில் பந்து பட்டது.
அதனை தொடர்ந்து இரண்டு தினங்களில் பின்னர் அவர் மரணித்தார்.
இந்தநிலையில் புதிய அறங்கூறுனர் சபை, ஹியூக்ஸின் மரணத்தை தடுத்திருக்க முடியுமா? முடியாதா? என்பது தொடர்பில் விவாதம் மேற்கொண்டது.
பந்து தலையில் பட்ட நேரத்தில் இருந்து எவ்வாறான விரைவான சிகிச்சைகள் வழங்கப்பட்டிருந்தாலும் பிலிப் ஹியூக்ஸின் மரணத்தை தவிர்த்திருக்க முடியாது என நரம்பியல் விசேட நிபுணரை மேற்கோள் காட்டி, அவுஸ்ரேலிய சட்டமா அபதிர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.