2016ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நொபல் பரிசு இரண்டு பேராசிரியர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரபல ஹாவாட் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றும் பிருத்தானியாவை சேர்ந்த 68 வயதான ஒலிவர் ஹாட் (Oliver Hart) மற்றும் எம்.ஐ.ரி. யில் பணியாற்றும் 67 வயதான பெங்ற் ஹொல்ம்ஸ்ரோம் (Bengt Holmstrom) ஆகியோருக்கே இந்த முறை பொருளாதாரத்திற்கான நொபல் பரிசு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம் மற்றும் பொது கொள்கைகளை மேம்படுத்தும் ஒப்பந்த செயல்பாடுகள் குறித்த அவர்களின் ஆராய்ச்சிக்கே, அவர்களுக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசினை வழங்க சுவீடன் தலைநகர் ஸ்ரொக்ஹோமை தளமாக கொண்டுள்ள ரோயல் அக்கடமி ஒப் சயன்ஸ் தீர்மானித்துள்ளது.