சிரியாவில் நிரந்தர கடற்படை தளம் ஒன்றை நிர்மாணிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சர் நிக்கொலாய் பன்கோவ் தெரிவித்துள்ளார்.
சிரிய துறைமுக நகரான ராட்டஸ்சிலேயே இந்த தளம் நிர்மாணிப்பதற்கான ஆவணங்கள் தற்போது தயாராவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிரியாவில் ரஷ்ய கடற்படை நிரந்தர தளம் அமையவுள்ள ராட்டஸ் சிரியாவின் மத்தியதரை கரையோரப்பகுதியில், லெபனானை தெற்காகவும் துருக்கியை மேற்காகவும் கொண்டுள்ளது.
சோவியத் யூனியன் உடைவதற்கு முந்திய காலம் முதல் மத்தியதரை கடல்பிராந்தியத்தில் ஒரே ஒரு கடற்படை தளமே உள்ளது.
தற்போது, சிரிய அரசாங்க பாதுகாப்பு படையணிகளுக்கு ரஷ்யா பல விதத்திலும் ஒத்தாசை வழங்க முன்வந்துள்ள நிலையில், சிரியாவில் தளம் ஒன்றின் அவசியம் குறித்து கவனம் எடுக்கப்பட்டுள்ளது.