பயணத்தை ஆரம்பித்தது பெலியத்தைக்கான ரயில்

210 0

மாத்தறையில் இருந்து கதிர்காமம் வரையான ரயில் பாதை நிர்மாணத் திட்டத்தின் கீழ் மாத்தறை பெலியத்தைக்கிடையிலான ரயில் பாதை ,இன்று திறக்கப்படுகிறது.

இது தொடர்பான நிகழ்வு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் அர்ஜூண ரணதுங்க தலைமையில் தற்பொழுது இடம்பெறுகிறது. 

இதனுடன் தொடர்புடைய பிலதுவ, வெஹரஹேன, கெக்குணதுற, வம்பருந்த, வெவுறுகன்னல மற்றும் பெலியத்த ரயில் நிலையங்களும் திறந்து வைக்கப்படுகின்றன. இந்த ரயில் பாதையில் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் முதலாவது ரயில் சேவை வவுனியாவில் இருந்து வரும் ரஜட்ட ரஜின ரயில் ஆகும்.

இந்த ரயில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் காலை 10.30 க்கு புறப்படவுள்ளது. இந்த ரயில் பிற்பகல் 02.07க்கு பெலியத்தை ரயில் நிலையத்தை வந்தடையவுள்ளது. நாளை முதல் அதாவது செவ்வாய்க்கிழமை முதல் நாளாந்தம் சுமார் 10 ரயில் சேவைகள் இடம்பெற இருப்பதாக ரயில்வே கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.இதற்கமைவாக நாளை 9 ஆம் திகதி அன்று மாத்தறை ரயில் நிலையத்தில் இருந்து காலை 07.30 க்கு பெலியத்தை ரயில் நிலையம் வரையிலும் மருதானை ரயில் நிலையத்தில் இருந்தும் காலை 6.30க்கு பறப்படும் ரயில் மாத்தறையை 10.45க்கு சென்றடைந்து பெலியத்தை வரைக்கும் பயணிக்கும்.

நண்பகல் 12.40 க்கு மாத்தறை ரயில் நிலையத்தில் இருந்து பெலியத்தை ரயில் நிலையம் வரையிலும் கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து 10.30 க்கு புறப்படும் ரயில் மாத்தறை ரயில் நிலையத்தில் பிற்பகல் 02.07க்கு பெலியத்தை ரயில் நிலையம் வரையிலும் கோட்டை ரயில் நிலையத்தில் பிற்பகல் 02.25க்கு புறப்படும் ரயில் மாத்தறை ரயில் நிலையத்திற்கு சென்றடைந்த பின்னர் மாலை 5.30 க்கு மாத்தறை ரயில் நிலையத்தில் இருந்து பெலியத்தை ரயில் நிலையம் வரை செல்லும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் காங்கேசன் துறையில் இருந்து வரும் ரயில் மாலை 04.30க்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்த பின்னர் மாத்தறை ரயில் நிலையத்தை நோக்கி பயணிக்கும் .இந்த ரயில் மாத்தறை ரயில் நிலையத்தை 7.20 க்கு சென்றடைந்த பின்னர் பெலியத்தை வரையில் பயணிக்கும். வார நாட்களில் மருதானை ரயில் நிலையத்தில் பிற்பகல் 2.40க்கு பயணிக்கும் சாகரிக்கா ரயில் மாத்தறை ரயில் நிலையத்தை இரவு 07.37க்கு சென்றடைவதுடன் பெலியத்தை ரயில் நிலையம் வரையிலும் செல்லும். வார நாட்களில் மருதானை ரயில் நிலையத்தில் மாலை 5.50க்கு புறப்படும்.

மாத்தறை ரயில் நிலையத்தை இரவு 9.40 க்கு சென்றடைந்து அங்கிருந்து பெலியத்தை வரையில் செல்லும். பெலியத்தை ரயில் நிலையத்தில் அதிகாலை 4.30க்கு புறப்படும் சாகரிக்கா ரயில் மருதானை ரயில் நிலையம் வரையிலும் காலை 5.20க்கு காலி குமாரி ரயில் பெலியத்தை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மருதானை ரயில் வரையிலும் பயணிக்கும். சனிக்கிழமைகளில் மாத்திரம் பெலியத்ததை ரயில் நிலையத்தில் காலை 5.50க்கு காங்கேசன் துறை வரையில் ரயில் பயணிக்கும்.

பெலியத்தை ரயில் நிலையத்தில் காலை 6.30க்கு புறப்பட்டு காலி ரயில் நிலையத்தை வரையிலும் ரஜரட்ட ரஜின ரயில் பெலியத்தை ரயில் நிலையத்தில் காலை 09.0 5க்கும் வவுனியா ரயில் நிலையம் வரையிலும் பெலியத்தை ரயில் நிலையத்தில் காலை 11.40 க்கும் மாத்தறை ரயில் நிலையம் வரையிலும் பெலியத்தை ரயில் நிலையத்தில் பிற்பகல் 1.30 க்கு பயணத்தை தொடரும் ரயில் மருதானை வரையிலும் பெலியத்தை ரயில் நிலையத்தில் மாலை 4.25 க்கு மாத்தறை ரயில் நிலையம் வரையிலும் என்ற வகையில் சேவைகள் இடம்பெறும்.

புதிய ரயில் வீதி 27 கிலோ மீற்றர் தூரம் கொண்டதாகும். இதில் மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் ரெயில்கள் பயணிக்க முடியும். அத்துடன் மணிக்கு 120 கிலோ மீற்றர் வேகத்தில் இந்தப் பாதையில் பயணிக்கும் வகையிலான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மாத்தறை – பெலியத்த ரெயில் நிகழ்ச்சித் வேலைத்திட்டப் பணிப்பாளர் பொறியியலாளர் பிரியந்த தீகல தெரிவித்துள்ளார். 

மாத்தறை – பெலியத்த ரயில் வீதியின் முதலாவது ரயில் பயணம் இன்று 9.00 மணிக்கு மாத்தறை ரெயில் நிலையத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து பிற்பகல் 2.00 மணியிலிருந்து நேரசூசிக்கு அமைய ரயில் போக்குவரத்து இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இன்று முற்பகல் 9 மணிக்கு இடம்பெறும் முதல் பயணத்தில் அமைச்சர் அர்ஜூண ரணதுங்க உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.