யேமனில் உள்ள ஹவுத்தி தீவிரவாதிகள், சவுதி அரேபிய தாயிப் வாநூர்தி படைத்தளத்தை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதல் குறித்த சேத விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
யேமனில் முன்னாள் ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றப்பட்டதனை அடுத்து, அவரின் ஆதரவாளர்கள் தற்போதையி ஜனாதிபதி அப்த் ரன்போ மன்சூரின் ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஆயுதப்போராட்டமாக மாறியுள்ளது.
யேமனின் அண்டை நாடான ஈரான் மற்றும் அல்குவைதாவின் ஒத்துழைப்புடன் ஆயுததாரிகள் யேமனின் பல பகுதிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பகுதிகளை மீட்பதற்காக சவுதி அரேபியாவின் தலைமையிலான அரபு ஒன்றிய படைகள், யேமன் அரசாங்கத்திற்கு உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.